தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்வது எப்படி? How to Apply Online for TN Govt Arts and Science College Admission 2025

How to Apply Online for TN Govt Arts and Science College Admission 2025

தமிழ்நாடு முழுவதும் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒரே விண்ணப்பத்தால் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விரும்பும் கல்லூரிகள் மற்றும் படிப்புகளை 10 வரை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் ஒருங்கிணைந்த கலந்தாய்வு நடைமுறை மூலம் சேர்க்கை நடைபெறும்.

How to Apply Online for TN Govt Arts and Science College Admission 2025
How to Apply Online for TN Govt Arts and Science College Admission 2025

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://www.tngasa.in என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். முகப்புப் பக்கத்தில் உள்ள “Click here for new UG Registration” என்ற இணைப்பை கிளிக் செய்து, வழிமுறைகளைப் படித்து பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்திற்கு முன் தேவையான ஆவணங்களை தயார் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரி விவரங்கள், அங்கு வழங்கப்படும் படிப்புகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், மாணவர்கள் அரசு கல்லூரிகளில் B.A, B.Sc, BBA,BCA ஆகிய இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

12th முடித்த மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

விண்ணப்ப பதிவு கட்டணம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.2 செலுத்த வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

மாணவர்கள் பெயர், மொபைல் எண், இமெயில் முகவரி ஆகியவை விண்ணப்பப்பதிவிற்கு அவசியமாகும்.

  • வகுப்புப்பிரிவு சான்றிதழ்
  • சிறப்புப் பிரிவு சான்றிதழ்
  • அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான உறுதி சான்றிதழ்
  • கல்வி மேலாண்மை தகவல் மைய எண் (EMIS number)
  • ஆதார் எண்
  • குடும்ப வருமானம் சான்றிதழ்
  • 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளி விவரங்கள்
  • 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள்

முக்கிய நாட்கள்

விவரம் தேதிகள்
விண்ணப்பம் பதிவு தொடங்கும் நாள் 07.05.2025
விண்ணப்பம் பதிவு கடைசி நாள் 27.05.2025

 

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளில் 2025-ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படும் கல்லூரிகளில் உள்ள இடங்கள் ஒதுக்கப்படும். அதனைத்தொடர்ந்து, மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளில் சென்று சேர்க்கையை உறுதிபடுத்த வேண்டும்.

How to Apply Online for TN Govt Arts and Science College Admission 2025
How to Apply Online for TN Govt Arts and Science College Admission 2025

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.